அரச அதிகாரிகளுக்கு நம்பிக்கை தரும் தீர்ப்பு.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்களினால் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.M.K.M. மன்சூர் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தினை கேள்விக்குட்படுத்தி தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி கெளரவ. மா.இளஞ்செழியன் அவர்களினால் 2020.06.01 அன்று வழங்கப்பட்டது.
இதில்அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்திற்கு அமைய ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை மீறி செயற்பட்டுள்ளார் என்பதுடன், தனது சொந்த விருப்பு வெறுப்பினை நிறைவேற்ற தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார் எனவும், இது இயற்கை நீதிக் கோட்பாட்டுக்கு முரணானது எனவும் உள்நாட்டு வெளிநாட்டு தீர்ப்புகளை உதாரணம் காட்டி தெளிவுபடுத்தினார்.
தீர்ப்பில் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா அவர்களினால் வழங்கப்பட்ட இடமாற்றத்தை இந் நீதிமன்று இரத்துச் செய்வதுடன் முறைப்பாட்டாளரான திரு.எம்.கே.எம்.மன்சூர் அவர்கள் தொடர்ந்தும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றுவார் என்றும் தெரிவித்தார்.
அரச அலுவலகர்களுக்கு அவர்களது பதவி மற்றும் பதவியின்மீதான துஸ்பிரயோகம் செய்யப்படும்போது  பல உத்தியோகத்தர்கள் நீதியை நாடிச் செல்வது மிக  அரிது. அந்தநிலையில் இவ்வழக்கும் நியாயமான தீர்ப்பும் நம்பிக்கை தருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram