திருகோணமலை மாவட்டத்தில் சிதைக்கப்பட்ட தமிழரின் சனத்தெகைப்பரம்பல்.

திருக்கோணமலை மாவட்டத்தில் மட்டும், 1958 ஆம் ஆண்டு கொலனி குடியேற்ற திட்டத்தின் மூலம், தமிழர்களுக்கு சரிசமமாக சிங்களவர்களை தென்பகுதி மாவட்டங்களிலிருந்து கொண்டுவந்து;
கந்தளாய்,
முள்ளிப்பொத்தானை,
தம்பலகாமம்,
கல்முட்டியான்,
பாலம்போட்டாறு,
கப்பல்துறை,
நாலாம்கட்டை,
ஆண்டாங்குளம்,
சிறிமாபுரம்,
சீனன்குடா போன்ற கிராமங்களை ஆக்கிரமித்து குடியேற்றி விட்டமையும்,
1976 ஆம் ஆண்டு அல்லை,
மாவிலாறு,
வானாறு,
குடியேற்றத்தின் மூலம் தனியே சிங்களவர்களை மட்டும் தென்பகுதி மாவட்டங்களிலிருந்து கொணர்ந்து குடியேற்ற விட்டமையும்,
அன்று தொடக்கம் இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக, அவ்வாறு தென்பகுதி மாவட்டங்களிலிருந்து சிங்களவர்களைக் படிப்படியாக கொணர்ந்து குடியேற்றிக்கொண்டு வருவதும்,
இவ்வாறான சட்டத்துக்குப் புறம்பான குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரித்ததும், கண்டும் காணாது இருந்துவந்ததும்,
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுத மெளனிப்பிற்குப் பின்னர்,
சேறுவில்,
பூநகர்,
மாவிலாறு,
கந்தளாய்-வானாறு,
சோமபுர,
சீனன்குடா-தானியகம,
கவாட்டிக்குடா,
கப்பல்துறை,
புல்மோட்டை,
கொக்கிளாய்,
மண்கிண்டிமலை,
சூரியன் ஆறு,
மணல் ஆறு,
(Helambawewa) மணலாறு-மருதமடுகுளம்,
மணலாறு-சுவந்தமுறிப்புக்குளம்,
மணலாறு-கொச்சிப்பனிச்சைக்குளம்,
மணலாறு-பனிக்கன்வயல்குளம்,
வேடன்வாய்க்கால்,
பெருமுறிப்புக்குளம்,
விரால்மடு,
இறாமடு,
மகாகல்குளம்,
மணல்ஒறுக்குளம்,
ஆரியகண்டன்குளம்,
ஆலங்குளம்,
நாவலங்குளம்,
ஆமையன்குளம்,
உடையார்வெளிக்குளம்,
கலகலப்பன்குளம்,
பழையமுறிப்புக்குளம்,
கருவேப்பங்குளம்,
தனிக்கல்லுக்குளம்,
பட்டிக்குடியிருப்பு,
கறுத்தார்குளம்,
ஆள்வெட்டிக்குளம்,
வம்பொடுகைக்குளம்,
புழுக்கனிட்டகுளம், போன்ற கிராமங்களிலும், வயல்வெளிகளிலும்,
இவைதவிர முதலிக்குளம்-பன்குளம் பிரதேசத்தில் இவைபோன்று இன்னும் பல நூற்றுக்கணக்கான, தமிழர்களின் பூர்வீக கிராமங்களிலும் வயல்வெளிகளிலும் வாழ்ந்துவந்த தமிழர்களை அச்சுறுத்தி வெளியேற்றிவிட்டு,
தென்மாவட்டங்களிலிருந்து சிங்களவர்களைக் கொணர்ந்து தொடர்ச்சியாக, மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைக் கண்டும் காணாதிருப்பதும்,
அவைப்பற்றி உரியமுறையில் குரல்கொடுக்காதிருப்பதும்,
சிங்கள பல்கலவி கலாச்சார பெண்களுடன் சல்லாபித்து வாழ்ந்துவிட்டு, அந்த அனுபவத்தை வைத்து, “சிங்களவர்கள் மிகமிக நல்லவர்கள் அவர்களுடன் சேர்ந்துவாழ்வது இனிமையாக இருக்கும்” என்று கதையளப்பதும் இந்த தமிழ் அரசியல் அசிங்க முகங்களது கபடத்தனம் இன்றி வேறென்னவென்று சொல்வது.
எந்தவொரு வினைக்கும் சமனும் எதிருமான எதிர்வினை உண்டு என்பது இயங்கியல் நியதி, அதற்குமப்பால் இது இவர்கள் மறந்துவிட்ட ஒரு கருப்பொருள் என்பதை நாம் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
“விதியே, விதியே, என்செயநினைத்தாய் எந்தமிழ்ச்சாதியை”
மன வேதனையுடன்-நடேசன் திரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram