திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவம் ஒத்தி வைத்தல்.

அருள்மிகு மாதுமை அம்பாள் ஆடிப்பூர மகோற்சவம்
ஒத்தி வைத்தல் தொடாபான ஆலய நிர்வாக சபையின் அறிவித்தல்.
அனைத்து
உபயகாரர்கள், அடியார்கள்.
தொண்டர்கள், நம்பிக்கைப் பொறுப்பாளர்கள்
திருக்கோணேஸ்வரம்
அன்பார்ந்த சகோதர சகோதரிகளுக்கு,
அன்பே சிவம்.
அருள்மிகு திருக்கோணேஸ்வரத்தில் மாதுமை அம்பாளின் ஆடிப்பூரத் திருவிழா எதிர்வரும் 15.07.2020ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26.07.2020ஆம் திகதி வரை நடைபெற இருந்ததை தாங்கள் அறிவீர்கள்.
கொறனா தொற்று நிலை சம்பந்தமாக சுகாதாரத் துறை, காவல் துறை சார்ந்த அதிகாரிகளுடன் பேசினோம். அத்தோடு இது சம்பந்தமாக, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் 11.06.2020 திகதிய சுற்றுநிருப அறிவுறுத்தல்களும் கருத்தில் எடுக்கப்பட்டது.
இவற்றின் விளைவாக, சமூக நன்மையை கருத்தில் கொண்டு, மாதுமை அம்பாளின் திருவிழாவினை ஒத்தி வைப்பதெனவும், அதற்கான பிராயச்சித்தத்தை உரிய காலத்தில் நிறைவேற்றி அடுத்த வருடம் விழாவினை நடாத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை இத்தால் அறியத் தருகிறேன்.
திருவிழா இடம்பெறும் 10 நாட்களும் காலை 9.30 மணிக்கும் மாலை 3.30மணிக்கும் அபிசேகமும், அவற்றைத் தொடர்ந்து விசேட பூசையும் இடம்பெறும்.
ஆலயத்திற்கு வருகை தரும் அடியார்கள், அரசினால் வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நடந்து கொள்ள வேண்டும் என தாழ்மையாக வேண்டிக் கொள்கிறோம்.
உபயகாரர்களுக்குரிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
கணபதிப்பிள்ளை அருள்சுப்பிரமணியம்
தலைவர்
திருகோணமலை கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை
01.07.2020

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram