திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள். சென்ற வாரதத்தொடர்

திருகோணமலை மாவட்ட கடந்த காலப் பொதுத் தேர்தல் முடிவுகள்.
சென்ற வாரதத்தொடர்

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலின் போது திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 2,06,884 வாக்காளர்களில் 1,41,772 பேர் வாக்களித்திருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 68.25 வீதம் ஆகும்.
இத்தேர்தலில் தமிழர் தரப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – ஈ.பி.டிபி ஆகிய கட்சிகளும், பெ.சூரியமூர்த்தி மற்றும் அ. பாக்கியதுரை தலைமையிலான சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சந்திரிகா தலைமையிலான பொது ஜன ஐக்கிய முன்னணி உட்பட 17 அரசியல் கட்சிகளும் ஆறு சுயேட்சைக் குழுக்களுமாக மொத்தம் 23 அணிகளில் இருந்து 161 பேர் போட்டியிட்டிருந்தனர்.
இவற்றில் பொதுஜன ஐக்கிய முன்னணி 53,860 வாக்குகள் பெற்று மூன்று ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 46,700 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டன.
தமிழர் விடுதலைக் கூட்டணி 14,090 வாக்குகளையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – ஈ.பி.டிபி 4,524 வாக்குகளையும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 3,748 வாக்குகளையும், தமிழீழ விடுதலை இயக்கம் – ரெலோ 498 வாக்குகளையும், பெ. சூரியமூர்த்தி தலைமையிலான சுயேட்சைக் குழு 2,621 வாக்குகளையும், அ. பாக்கியதுரை தலைமையிலான சுயேட்சைக் குழு 1,434 வாக்குகளையும் பெற்றன.
பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பாக ஏ.எம்.எம். நஜீப் 18,173 விருப்பு வாக்குகளையும், எம் எஸ். பைத்துல்லா 15,588 விருப்பு வாக்குகளையும், சோமதாஸ குணவர்தன 15,392 விருப்பு வாக்குகளையும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக எம்.ஏ.எம் மஹ்ரூப் 21,438 விருப்பு வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டனர்.
தமிழர்களின் வாக்குகள் பிரிந்ததன் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் இல்லாமற் போய் இருந்தது. தமிழர் விடுதலை கூட்டணி இன்னும் 348 வாக்குகளை மேலதிகமாகப் பெற்றிருந்தால் ஒரு ஆசனம் கிடைத்திருக்கும்.
மூதூரில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் எம் எஸ். பைத்துல்லா கொல்லப் பட்டதையடுத்து அவரது இடத்திற்கு அவரின் சகோதரர் எம்.எஸ். தௌபிக் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 212.280 வாக்காளர்களில் 1,69.576 பேர் வாக்களித்தனர். இது மொத்த வாக்காளர்களில் 78.86 வீதம் ஆகும்.
இத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை இயக்கம், ரெலோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. ஆகியவை தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில். தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்திலும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி. தனியாக வீணை சின்னத்திலும் போட்டியிட்டன.
இவை தவிர, ஐக்கிய தேசிய கட்சி, பொது ஜன ஐக்கிய முன்னணி சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி , ஆகியவை உட்பட பதினைந்து அரசியல் கட்சிகளும், ஆறு சுயேட்சைக் குழுவுமாக மொத்தம் 147 பேர் போட்டியிட்டனர்.
இவற்றில் ஐக்கிய தேசிய கட்சி 62.930 வாக்குகள் பெற்று இரண்டு ஆசனங்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 56,121 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும், பொது ஜன ஐக்கிய முன்னணி 32.997 வாக்குகள் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டனர் 1.470 வாக்குகள் பெற்ற ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, 6.095 வாக்குகள் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் ஆசனம் எதனையும் பெறவில்லை.
தமிழர் விடுதலைக் கூட்டணி, சார்பில் 40.110 விருப்பு வாக்குகள் பெற்ற இரா.சம்மந்தன், ஐ.தே.க. சார்பில் 25.264 விருப்பு வாக்குகள் பெற்ற எம்.ஏ.எம் மஹ்ரூப், 24.847 விருப்பு வாக்குகள் பெற்ற கே.எம் தெளபிக் பொது ஜன ஐக்கிய முன்னணி சார்பில் 14.938 விருப்பு வாக்குகள் பெற்ற சோமதாஸ் குணவர்தன, ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தேர்தலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முழுமையான ஆதரவும் பங்களிப்பும் இரா.சம்மந்தன்னுக்கும் திருகோணமலை மாவட்டத்தில் மக்கள் மத்தியில் பெரும் ஆதர தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சேர்ந்த திரு ஸ்ரீகாந்தவுக்கும் இருந்தது.
தொடரும்

மு.ளசளந்தரராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram