பல தடைகளையும் தாண்டி கன்னியாவில் ஆடி அமாவாசைத் தீர்த்தம் நடைபெற்றது. .2020.07.20

இலங்கையில் பிதுர் தர்ப்பண வழிபாட்டுக்கு பிரசித்தமான தலமான கன்னியாவில்  பல தடைகளையம் தாண்டி கன்னியா சிவன் ஆலயத்தில் பூசைவழிபாடும், கன்னியா வெந்நீர் ஊற்றில் தர்ப்பணம் தீர்த்தமாடுதல் இடம்பெற்றது.

திருகோணமலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சம்பந்தன் அவாகளம் கலந்துகொண்டார்.

குறித்த தினத்திற்கு முன்னதாக கன்னியா பிள்ளையார் கோவில் உரிமையாளர் உப்புவெளிப் பொலில் செய்யத முறைப்பாட்டின் காரணமாக பூசை தடைசெய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலய அறங்காவலர் சபையின் செயலாளரது அறிக்கை வருமாறு.

கன்னியா வெந்நீர் ஊற்றில் ஆடி அமாவாசைத் தீர்த்த நிகழ்வை நடத்த நடைபெற்ற சம்பவஙங்கள் காலக் குறிப்புடன்.

2018 கன்னியாவில் இராவண சேனை தென்கைலை ஆதீனத்தின் ஆசிர்வாத்துடன் ஆடி அமாவாசைத் தீர்த்தை நீண்ட நாட்களுக்குப் பின் நடாத்தியது.

2019 தென்கைலை ஆதீனத்தால் உருவாக்கப்பட்ட கன்னியா சிவன் ஆலய அறங்காவலர் சபையினால் ஆடி அமாவாசைத் தீர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.

2020.06.06 அன்று கன்னியா பிள்ளையார் கோயில் காணி உரிமையாளர் திருமதி.க.கோகிலரமணி அவர்கள் கன்னியா சிவன் ஆலயத்தில் வழிபாட்டை நிறுத்த உப்புவெளிப்பொலிசில் முறைப்பாடு செய்தார்.

2020.06.07 முறைப்பாட்டிற்கு அமைய சிவன் ஆலயத் தலைவர் கு.செந்தூரன், செயலாளர் க.துஷ்யந்தன், பொருளாளர் க.தேவகடாட்சம் ஆகியோர் உப்புவெளிப் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு ஈராண்டுகளாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நித்திய பூசைக்குத் தடைவிதிக்கப்பட்டது.

2020.06.08 கன்னியாவில் சைவ வழிபாட்டு அடையாளமாக இருந்த சிவன் ஆலய பூசையும் முடக்கப்பட்டது. பதிவு செய்தால் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதி எனும் நீதிக்குப் புறம்பான மற்றும் சட்டடத்திற்கு அமையாத வகையில் உப்புவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரி கட்டளையிட்டார்.

2020.06.08 முதல் கன்னியா சிவன் ஆலயத்திறகு சட்ட அங்கிகாரம் பெறும் நடவடிக்கை நிர்வாகத்தால் துரிதமாகச் செய்யப்பட்டுவருகின்றது.

2020.07.13 ஆடிஅமாவாசைத் தீர்த்தம் நடத்த உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார அறிவுறுத்தல் அனுமதி பெறப்பட்டது.

2020.07.14 அரசாங்க அதிபரை செயலாளர் துஷ்யந்தன், பொருளாளர் தேவகடாட்சம் ஆகியோர் சந்தித்து, கடந்த ஆண்டு மாவட்டச் செயலகம் ஆடி அமாவாசைத் தீர்த்தத்தை நடத்த எடுத்த முன்னெடுப்பு தொடர்பான விபரத்தையும், அதற்கான அனுமதிக் கடிதமும் வழங்கப்பட்டது.

2020.07.15 மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் அனுமதிக்கான கடித்தப்பெற தலைவர் செந்தூரன் அதிகாரிகளைச் சந்தித்தார். அது தொடர்பாக உப்புவெளிப் பொலிசுக்கு அறிவிப்பதாக அலுவலகத்தில் தெவிக்கப்படது.

2020.07.17 – நாம் வழங்கிய ஆடி அமாவாசைத் தீர்த்தத் துண்டுப் பிரசுரத்துடன் அதற்கு அனுமதி வழங்கி பாதுகாப்ளிக்க அரசாங்க அதிபர் உப்புவெளிப் பொலிசாருக்கு அறிவுறுத்தியிருந்தார்.

2020.07.18 மதியம் 11.00 மணிக்கு உப்புவெளிப் பொலிஸ் நிலையத்தில் இருந்து தலைவர் செயலாளர், பொருளாளருக்கு அழைப்பு விடுக்கபபட்டது. மாலை 2.30 மணிக்கு ஆடிஅமாவாசைத் தீர்த்த அனுமதி தொடபாக பேச வருமாறு கூறப்பட்டது.

2020.07.18 மதியம் செயாளர், கௌரவ இரா.சம்பந்தன் ஐயா அவர்களை அவரது அலுவலகத்தில் நவம் சேருடன் இணைந்து சந்தித்து ஆடி அமாவாசைத் தீர்த்தம் மற்றும் உப்புவெளிப் பொலிசின் நிலைப்பாடு கூறப்பட்டது.

2020.07.18 மதியம் 1.00 மணிக்கு திருகோணமலை சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சகரை தொடர்புகொண்டு மேற்படி நிகழ்வை நடத்த அ ஒத்துழைக்குமாறு கேட்டதன் விளைவாக நிர்வாகத்தினரை அதிகாரியின் அலுவலகத்திற்கு அனுப்புமாறு கூறியிருந்தார்.

2020.07.18 மதியம் 1.30 மணிக்கு சிவன் ஆலயத் தலைவர் கு.செந்தூரன், செயலாளர் க.துஷ்யந்தன், பொருளாளர் க.தேவகடாட்சம் ஆகியோர் திருகோணமலை சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சகரை சந்தித்தோம். விடயம் விளக்கப்பட்டது. உப்புவெளிப் பொலிசுக்கு விடயம் அறிவிப்பதாகவும் அங்கு செல்லுமாறும் அறிவுறித்தினார்.

2.020.07.18. மாலை 2.30 மணிக்கு உப்பு வெளிப் பொலிஸ் நிலையயத்திற்கு மூவரும் சென்றோம். அங்கு கன்னியா பிள்ளையார் கோவில் உரிமையாரின் முறைப்பாடு ஆடி அமாவாசைத் தீர்த்த நிகழ்வை நிறுத்துமாறு கோரிக் கொடுக்டகப்பட்டிருந்தது.
மூவரதும் வாக்குமூலம் பெறப்பட்ட பின் மாலை 4.30 மணிக்கு முறைப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுபபான அதிகாரி நிலயப் பொறுப்பதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய தீர்த்த நிகழ்வை நிறுத்த உத்தரவு பிறப்பித்தார்.

ஆதாரமற்ற ஒரு முறைப்பாட்டை வைத்து பாரம்பரியமான ஒரு பூசை வழிபாட்டை நிறுத்த முடியாது என்றும், கடந்தாண்டு மாவட்டச் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் பிரிவு அனைத்தும் இணைந்து இதை நடத்த ஒத்துழைத்தது, என்பனவற்ற எடுத்துக்கூறியும்,

நாம் வராவிட்டாலும் பிள்ளையார் கோயில் உரிமையாளரை நடத்த அனுமதிக்குமாறும் கோரினோம். அவர் தான் செய்யவில்லை என மறுத்தார்.

2020.07.18 மாலை 6.30 மணியளவில் பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறி இரவு 7.30 மணிக்கு இத்தகவலை சம்பந்தன் ஐயாவிடம் தெரிவித்தோம்.

இரண்டாது தடவை திருகோணமலை சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சகருடன் சம்பந்தன் ஐயா அவர்கள். பேசினார். நிகழ்வு எந்த வித பிரச்சனையும் இன்றிநடத்த ஒத்துழை வழங்குவேன் என்றும். நாளை காலை 10.30 மணிக்கு நிர்வாகத்தினரை சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சகர் அலுவலகத்திறகு வருகைதருமாறும் கேட்டிருந்தார்.

2020.07.19 காலை 10.30 மணிக்கு தலைவர், செயலாளர், பொருளாளர் 12.00 மணிவரை சிரேஸ்ர பொலிஸ் அத்தியேட்சகர் அலுவலகத்திற் காத்திருந்தோம். அவர் அலுவலக்திற்கு வருகை தராத செய்தியை அடிக்கடி நவம் சேருக்கு தகவல் தெரிவிக்க, நாம் சம்பந்தர் ஐயா அவர்களனின் அலுவலகத்திறகு அழைக்கப்பட்டோம்.

2020.07.19 காலை 1.00 மணியளவில் சம்பந்தன் ஐயா அவர்கள் வியம் தொடர்பாக பேசினார், அதன்போது உப்புவெளிப் பொலிசின் கருத்து மற்றும் வழக்கு, கோகில ரமணி ஆகியோரின் முறைபடாடு என்பனவற்ற எடுத்துரைக்க.
திரு. சம்பந்தன் ஐயா அவர்கள் மிகக் கடும் தொனியில் எனது தாய் தந்தைக்கான பிதுர் வழிபாட்டை எனது இடத்தில் செய்ய யாரும் என்னைத் துடுக்க முடியாது. அதை நடத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும். நீதி மன்றத் தீர்ப்பு தொடர்பாக திரு. சுமந்திரன் பேசுவார் என்றார்.

குறித்த நேரம் சுமந்திரன் அவர்களுக்கும் விடயம் சொல்லப்பட்டது.

2020.07.19 மதியம் 2.00 மணிக்கு நவம் சேருக்கு அழைப்பெடுத்த சுமந்திரன் அவர்கள் தான் சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகரிடம் பேசியதாகவும். குறித்த வழக்குப் பிரதியை யாரேனும் வழக்கறிங்கர் மூலமாக உப்புவெளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு வழங்குமாறும் கூறினார்.

அத்துடன் இவ்வியத்தை எதுவித பிரச்சனையும் இல்லாமல் நிகழ்த்த மேலும் சுலபமாக்க தமிழர்களை தரக்குறைவாக எண்ணாது செயற்படுத்தும் வழி கன்னியா காணி உரிமையாளரின் பொலிஸ் முறைப்பாட்டை மீளப்பெறுதல் என சிரேஸ்ட பொலிஸ் அத்தியேட்சகர்: தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சுமந்திரன் அவர்கள் கோகில ரமணி அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் அவர் அழைப்பை எடுத்துப் பேச முனைந்தும் அவர் பேசவில்லை.

திருகோணமலையில் அனைவரும் மதிக்கும் காளியோயில் பிரதம குருவும் கன்னியா சிவன் ஆலயத்தின் காப்பாளரும் ஆன ஐயாவை கோகில ரமணி அவர்களிடம் .பேசும் படி கோரிய போது. சுமந்திரன் அவர்களையே மதிக்காத அவரிடம் நான் என்ன பேசுவது என்றும். நீங்கள் அவருடன் பேசுவதைக் கைவிட்டு வேறு முயற்சி எடுங்கள் என்றார்.

மதியம் 2.30 மணியளவில் நவம் சேர் அவர்கள் தனக்கு அறிமுகமான ஒருவரை கோகில ரமணி அவர்களின் வீட்டுக்கு அனுப்பி அவரது தொலைபேசியில் இருந்து சுமந்திரன் அவர்களுக்கு அழைப்பெடுத்து காணி உரிமையாளருடன் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் அவர் தலைமறைவாகி வெளியூர் சென்றுவிட்டார் என வீட்டில் சொல்லப்பட்டதாக அனுப்ப்படடட நபர் திரும்பி வந்தார்.

அத்துடன் உப்புவெளிப் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல சட்டத்தரணி ஒருவர் தேவை எனும் நிலையில் புலேந்திரனைத் தொடர்பு கொண்டபோது அவர் ஈச்சலம் பற்றில் இருந்ததால் இச்சமயம் செல்ல முடியவில்லை.

தொடர்ந்து வழக்கறிஞ்ஞர் சுபாசினி அம்மா அவர்களைத் தொடர்பு கொண்ட போது அவர் மாலை 5.00 மணிக்குப் பின் செல்வதாக நவம் சேரிடம் கூறினார்.

“ இந்த விடயத்தை அங்கிருந்த சிலர் ஒட்டுக் கேட்டக்கொண்டிருந்தனர்”

பொலிஸ் அதிகாரி வழிபாட்டுகத் தடையில்லை எனக் கூறினாலும் தடுக்கப்பட்ட நிர்வாகத்தினரை, பொலிசார் வழிபடச் செல்லாம் எனும் உத்தரவை பெறக் காத்திருந்தோம;

2020.07.19 மாலை 6.00 மணியளவில் என்னைத் தொடர்புகொண்ட அருண் கேமச்சந்திரா, என்னிடம் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் அனுப்புமாறும் மாவட்டச் செயலாளருடன் பேசியதாகவும் கூறினார்.

கட்சி பேதம் இருந்தாலும் திருகோணலையின் புதல்வன் என்பதாலும் கன்னியா விடயத்தில் அனைரினதும் கூட்டு முயற்சி தேவை என்பதாலும் என்னிடம் இருந்த ஆவணங்கள் அனைத்தையும் வழங்கினேன்.

2020..07.19 இரவு 8.00 மணியளவில் தனது முயற்சியை முகப்புத’தகத்தில் அவசர அவசரமாகப் பதிவிட்டதைப் பார்த்த பின் நான் அழைப்பெடுத்துக் கேட்டேன் என்ன அடைவு என்று. பொது அடையாளத்துடன் பூசை நடத்தலாம் எனும் தகவலைத் தந்தார்.

பூசை நடத்தலாம் என்பதை மாவட்டச் செயலாளர் உப்புவெளிப் பொலிசுக்கு மூன்று நாளுக்கு முன்பே அறிவித்து விட்டார் என்பது மேலயும் சொல்லப்பட்டுள்ளது.
நான் கூறினேன் உப்புவெளிப் பொலிஸ் 18 திகதி எம்மை நடத்த வேண்டாம் எனச் சொன்னது, அதை நீங்கித்தரவே உங்களுக்கு எனது ஆவனத்தை வழங்கினேன் எனக் கூறினேன். அவரவர் நலன்.

இந்த நேரத்தில் ஒட்டுக் கேட்டக்கொண்டிருந்த ஒரு கூட்டம் தமது வழமையான “மாற்றான் குழந்தைக்கு தம் பெயர் முதல் எழுத்தைச் சூட்டும் பணியை பெருமையுடன் பறைசாற்றியது.

உரியவர்களையும் உழைத்தவர்களையும் வரவிடாது பார்க்கும் கசவாரக் கைங்கரியத்தையும் செய்யத்தொடங்கியது இக்கூட்டம்.

2020..07.19 இரவு 8.30 மணிக்கு திரு குகதாசன் அவர்களுக்கு மேற்படி விடயத்தை கூறி, இப்பொழுது பொலிசார் எமக்கு நேரடியாக அறிவித்தல் தரவேண்டும் எனக் கூற சம்பந்தன் ஐயாவை டிஐஜி அவர்களிடம் தகவல் தெரிவிக்குமாறு குகதாசன் அவர்கள் கூற
டிஐஜி யைத்தொடர்பு கொணட சம்பந்தன் ஐயா நடைபெற்ற விடயத்தைக்கூற, காலை அங்கு கடமையில் உப்புவெளி பொறுப்பதிகாரியும், ஏஎஸ்பி ஒருவரும் கடமையில் இருப்பர் நிகழ்சியை சிறப்பாக நடத்துங்கள் எனும் உறுதி டிஐஜி இனால் வழங்கப்பட்டது.

எமக்கு இத்தகவலை குகதாசன் ஐயா தெரிவித்து நீங்கள் இதை உறுதிப்படுத்த விரும்பினால் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று உறுதிப்படுத்தல் சிறந்தது என்றார்.

2020..07.19 இரவு 9.30 உப்புவெளிப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற நாம் தடை நீக்கினால் ஏன் எமக்கு அறிவிக்க வில்லை எனும் கேள்வியை எழுப்பினோம். (அவர்களுக்கு இது ஒரு கௌரவப் பிரச்சனை) எந்த வித முரண்பாடும் இல்லாமல் வழிபாடு நடந்தால் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றார் பொலிஸ் பொறுப்பதிகாரி.

தாம் அங்கு கடமையில் இருப்போம் எந்தப்பிரச்சனையும் இல்லை என்றார் உப்புவெளிப் பொலிஸ் அதிகாரி.

2020.07.20
காலை 7.00 மணிக்கு அங்கு சென்ற நிர்வாகத்தினர் வருகைதந்நத அனைவருக்கும் சுத்தப்படுத்தும் திரவம் வழங்கியது முதல் அனைத்துப் பணிகளையும் வழமைபோல் மிகச் சிறப்பாக முன்னெடுத்தோம்.

கன்னியா சிவன் ஆலய நிர்வாகத்தினர் பூசையினை ஆரம்பித்து அனைத்துப் பணிகளையும் நிறைவுறுத்தி வெளியேறும் வரை இரு அதிகாரிகளும் கடமையில் இருந்தனர். அவர்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்தோம்.

கடந்த இரண்டு நாளும் இந்த நிகழ்வை நடத்தியே ஆக வேண்டும் எனும் விடாப்பிடியுடன் இருந்து பலருக்கும் பலவகையிலும் அழுத்தத்தைக் கொடுத்து இக்காரியத்தை நிறைவேற்றினோம்.

குறிப்பாக முன்னாள் பாராளு மன்ற உறுப்பினர் கௌரவ.இரா. சம்மந்தன் அவர்கள் முதல் நாள் எமக்கு உறுதி அளித்தது போல் நிகழ்வை நடத்தி முடிக்க ஆவன செய்ததுடன் இதனை நிறுத்த பலர் எடுத்த முயற்சியையும் உடைத்தார். ஐயாவுக்கு எமது மனமார்ந்த நன்றி.

குறித்த அதிகாரிகளுக்கு வழக்கு தொடர்பான விடயத்தை தெரிவித்ததுடன் அவரது ஒத்துழைப்பிற்கும் சுமந்திரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

தொடர்ச்சியாக ஐயாவைக் காண நேரம் ஒதுக்கி எம்முடன் பணியாற்றியதுடன் இறுதிப் பதிலைப் பெற்றுத் தந்த குகதாசன் ஐயாவுக்கு நன்றி.

தனது தேர்தல் இணைப்புக் கடமைக்குள் சம்பந்தர் ஐயா மற்றும் அதிகாரிகளுக்கு இவ்விடயம் தொடர்பாக தெளிவு படுத்தியதுடன், முழு நேரமும் எம்முடள் தொடர்பில் இருந்த நவம் சேர் அவர்களுக்கு நன்றி.

ஆரம்பம் முதலே இதை நடத்த அனுமதி அளித்திருந்த அரசாங்க அதிபர் மற்றும் இணைந்த அதிகாரிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இறுதி நேரத்தில் எம்முடன் கைகோர்த்துப் பயணித்த தம்பி அருண் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

ஆரம்பம்முதல் இப்பணிக்காக தொடர்சியாக அனைத்து தொடர்பாடல்களையும் சந்திப்புகளையும் ஏற்பாடு செய்து தந்த பெயர் குறிப்பிட விரும்பாத நண்பருக்கும் மிக்க நன்றி.

இவ்விடயத்தினை தனது வகிபாகத்தை மேற்கொண்டு தேவையான நேரத்தில் உரியவர்களை அணுகி எமக்கு ஒத்துழைப்பு நல்கிய பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் வைத்தியர் குணாளன் அவர்களுக்கும் மிக்க நன்றி.

எவ்வாறான இக்கட்டான சூழலிலும் ஆலயத்தில் அக்கறையும் நிர்வாகத்தில் நம்பிக்கையும் கொண்டு பூசை விடயங்கள் அனைத்தையும் கவனித்த எமது கன்னியா சிவன் ஆலய குரு மோகன் சர்மா அவர்களுக்ம் மனமாந்த நன்றி.

சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருந்த இந்த நிகழ்வைத் தடுக்க முனைந்து, எமது தமிழ் அரசியல் வாதிகளின் சக்தியையும் எமது திடத்தையும் வெளிப்படுத்தியதுடன் அரசியல் வாதிகளுக்குக் களம் அமைத்துக்கொடுத்த திருமதி கோகில ரமணி அவர்களுக்கும் நன்றி.

இறுதி நேரத்தில் மக்களுக்கு அறிவித்து தீர்த்தமாட மக்களை வர முகப்புத்தகத்திலும் தொலைபேசியிலும் அழைத்த தம்பியவைக்கும் அவர் சார்ந்தோருககும் நன்றி.

இப்பணிகளுக்கு என்னுடன் இணைந்திருந்த தலைவர் செந்தூரனுக்கு நன்றி பொருளாளர் தேவகடாட்சம் ஐயா மிக அர்ப்பணிப்புடன் எம்முடன் இணைந்து சளைக்காது பணியாற்றினார் அவர் நிர்வாகியானாலும் அதையும் கடந்து அவரது பணிக்கு எனது பணிவான நன்றி.

அப்பணிகளில் எமக்கு ஒத்துழைப்பு நல்கிய உறுப்பினர்கள் வைத்தியர் ஜெயா, ஆசிரியர் பிரகாஷ், பொன் இராமலிங்கம் ஐயா, ரூபன், பவானி, பிரியங்கன் ,துஷாந்தன் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி
மற்றும் வருகை தந்த ஒத்துழைகத்த அனைத்து உள்ளங்களுக்கும் பணிவான நன்றி.

இதில் கற்றுக்கொண்ட பாடங்கள்.
1. விடா முயற்சி வெற்றிதரும்.
2. அரசியல் வாதிகளை நாமே இயங்கச் செய்ய வேண்டும்.
3. பிரச்சனைகளுக்கு பிறர் காரணமல்ல நம்மவர்களதான் காரணம்.
4. இளையோருக்கு கன்னியாமீது எந்த அக்கறையம் இல்லை எம்மீதான காழ்ப்புணர்ச்சியே ஓங்கிக் கிடக்கின்றது.
5. கன்னியா பறிபோனாலும் காரியமல்மல்ல எமது பெயர் உச்சரிக்கப்படக்கூடாது.

நாம் ஈசன்மீது கொண்ட நம்பிக்கை எம்ஆத்ம பலமாக வழிநடத்துகின்றது. எதிர்மறையற்ற எமது சிந்தனை எமக்கு என்றும் சித்தியையே தரும்.

அத்துடன் நாம் சாம,பேத, தான, தண்டம் எனும் வகையில் பணியாற்றுகின்றோம் தேவாயன இடத்தில் தேவையானவர்களுக்கு தேவையானதைப் பாவிக்க எம்பெருமான் எமக்கு அருள் கூர்ந்துள்ளார்.

க.துஷ்யந்தன்,
செயலாளர்,
கன்னியா வெந்நீர் ஊற்று சிவன் ஆலய அறங்காவலர் சபை,
கன்னியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram