தமிழரசுக் கட்சியின் மந்திராலோசனை திருகோணமலையில்.

மாற்றம் நிறைந்த 2020.08.05 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும்  தமிழரசுக்கட்சி பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.  வாக்கு வீழ்ச்சி, கட்சியின் உயர் நிலை உறுப்பபினர்கள் தோல்வி, அம்பாறை மாவட்ட பாராளுன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமை என்பன மேலும் சிக்கலை  அதிகரித்துள்ளது.

தேசியப்பட்டியலை அம்பாறைக்கு வழங்கி  இன்னுமொரு வகையிலான விமர்சனத்தைத் தவிர்த்தாலும் அது எதிர்காலத்தில் என்ன அடைவைத் தரும் என்பதில் உறுப்பினர்கள் திருப்தி அடையவில்லை எனும் நிலைப்பாடும் உள்ளது.

இந்த நிலையிலேயே இன்று 2020.08.15 அன்று காலை 11.00 மணிக்கு திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இரா. சம்பந்தன் இல்லத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நிர்வாகச் செயலாளர் குணனாயகம், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞான சிறிதரன், திரு. சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் பி.சத்தியலிங்கம், சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர்  செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன் அவர்கள் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது எனவும்,   தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் 29ம் திகதி வவுனியாவில் கூடவுள்ளதாகவும் அதில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram