பிதிர்வழிபாட்டுக்கு உகந்த காலம் எது தெரியுமா ?

மஹாளய பட்ஷம் – 15 நாட்கள்
——————————————————

2-9-2020 ஆவணி 17ம் தேதி புதன் கிழமை ஆவணி பௌர்ணமி தினத்தில் மஹாளய பட்ஷம் ஆரம்பம். அன்று முதல் 15 நாட்கள் மஹாள ய பட்ஷ நாட்கள்.

இறந்த முன்னோர்களின் ஆத்மா பித்ருலோகம், எமதர்மராஜ விசாரணை, சொர்க்கம் அல்லது நரகம், மீண்டும் பிறப்பு அல்லது தேவலோகம் என போய்க்கொண்டே இருக்கும். இடையில் பூமிக்கு வர முடியாது. மஹாளய பட்சம் பதினைந்து நாட்கள் மட்டும் அவர்கள் விரும்பும் இடம் சென்று திருப்ப அனுமதி உண்டு. இறந்த தாய், தந்தை, முன்னோர்களை இந்த பதினைந்து நாட்கள் உங்கள் வீட்டுக்கு வரும்படி அழைத்து அவர்களுக்கு விருப்பமான செயல்களை செய்து, விருப்பமானவற்றை படையலிட்டு வழிபடுங்கள். அசைவ படையல் உட்பட உங்கள் படையலையும், வழிபாட்டையும் அவர்கள் நேரிடையாக பெற்றுக்கொள்வார்கள். ஆகவே இந்த பதினைந்து நாட்களும் முழுமையாக இல்லாவிட்டாலும், பெற்றவர்களுக்கும், முன்னோர்களுக்கும் செய்யும் மரியாதையாக முடிந்தவரை கடைபிடித்தால் நல்லது. இந்த பதினைந்து நாட்களில் திதி கொடுக்கும் நீர்நிலைகளில் திதி கொடுத்தும் வழிபாடு செய்யலாம்; அது உங்கள் விருப்பம்.

அந்த 15 நாட்கள் தவிர மற்ற நாட்களில் இங்கே நாம் செய்யும் முன்னோர்கள் வழிபாட்டை பித்ருதேவன் ஏற்று, அதை நமது முன்னோர்களிடம் சேர்த்துவிட்டு, அவர்கள் ஆசிர்வாதத்தை பித்ருதேவனே நம்மிடம் கொண்டுவந்து சேர்கிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram