தனது நியமனங்கள் தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டாம். ” சனாதிபதி தெரிவிப்பு”

“என்னால் வழங்கப்பட்ட பல்வேறு நியமனங்களுக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கக்கப்பட்டு வருகின்றன.
இந்த நியமனங்கள் அனைத்துமே – எமது நாட்டின் இறையான்மை மற்றும் தேசிய பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதுடன் – எனது “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தைச் செயற்படுத்துவதற்காக மிகவும் நுணுக்கமாக விடயங்களைக் கருத்திலெடுத்தே வழங்கப்பட்டவையாகும்.
அதேபோன்று – நியமிக்கப்பட்டவர்களின் தேசப்பற்று, தகைமைகள், செயலாற்றல் மற்றும் பின்புலம் என்பன சீரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு – சந்தர்ப்ப சூழல்களுக்கு ஏற்ற வகையில் அரசாங்கத்தின் கொள்கையைச் செவ்வனே முன்னெடுப்பதற்கு அவர்கள் பொருத்தமானவர்கள் என்பது கண்டறியப்பட்ட பின்பே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே – ஆழமாகச் சிந்தித்து வழங்கப்பட்ட இந்த நியமனங்களை மாற்றி, பல்வேறு அழுத்தங்களின் காரணத்தினால் வேறு ஆட்களை அந்த பொறுப்புக்களுக்கு நியமிக்கும் எவ்வித எண்ணமும் என்னிடம் இல்லை.
அதனால் எனது நியமனங்களை மாற்றுமாறு, எனக்கோ அல்லது எமது அரசாங்கத்திற்கோ, அழுத்தங்கள் ஏதும் கொடுக்க முனைய வேண்டாம் என அனைவரிடமும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் .
எனது நியமனங்களுக்கு முரணான கருத்துக்களை பகிரங்கத்தில் முன்வைப்பதானது – நியமிக்கப்பட்டுள்ள நபர்கள் தமக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு அது தடையாக அமைவது மட்டுமன்றி – சமுதாயத்தில் அவர்கள் தொடர்பில் தவறான எண்ணங்கள் ஏற்படுவதினால், அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற வேலைத்திட்டங்களே உண்மையில் வீணடிக்கப்படுவன.”
என சனாதிபதி அவர்கள் தன் முகப்புத்தகப் பதிவில் பதிந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram