திறந்த பல்கலைக் கழகத்தின் சட்டக் கற்கைக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட இளமானிப் பட்டத்திற்கான கற்கைநெறிக்கு மாணவர்களைத் தெரிவு செய்யும் விண்ணப்பங்கள் 13.09.2020 முதல் 13.10.2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் கல்வி / தொழில்முறை தகுதிகளில் ஏதேனும் ஒன்றைப் பெற்ற 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஒருவர் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்.

  1. க.பொ.த (உயர் தரம்) பரீட்சையின்  எந்தத் துறையிலேனும் பழைய பாடத்திட்டம் எனின் நான்கு (04) பாடங்களில் யாதேனும்  மூன்று  (3 ) பாடங்களில் ஒரே தடவையில் சித்தி  பெற்றிருக்க வேண்டும். 

      அல்லது

2. க.பொ.த (உயர் தரம்) பரீட்சையின்  எந்தத் துறையிலேனும் புதிய பாடத்திட்டம் எனின் மூன்று (03) பாடங்களில்  ஒரே தடவையில் சித்தி  பெற்றிருக்க வேண்டும். 

அல்லது

3.  திறந்த பல்கலைக்கழகம் வழங்கும் எந்தவொரு திட்டத்திலிருந்தும் SLQF நிலை 2 அல்லது அதற்கு மேற்பட்ட முப்பது (30) பாட வரவுகளை வைத்திருத்தல் வேண்டும்.

அல்லது

4. இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞராக இருப்பவர்.

அல்லது

5. பல்கலைக் கழக பேரவையினால்  ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர் கல்வித்  தகைமை இருத்தல் வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

RSS
Follow by Email
Telegram